தஞ்சாவூரில் சிட்பண்ட் உரிமையாளர் பல கோடி ரூபாய் மோசடி

 

தஞ்சாவூர், ஆக. 29: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள வழுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மர்ஜுக் அலி. இவர் சிட்பண்ட் நிறுவனம் நடத்தி அதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை பங்குத்தொகை வழங்கப்படும் என விளம்பரம் செய்திருக்கிறார். இதனை நம்பி 400க்கும் மேற்பட்டோர் ஒரு லட்சம் முதல் 30 லட்சம் வரை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். தொடக்கத்தில் முதலீடு தொகைக்கு முறையான பங்குத்தொகை வழங்கி வந்த மர்ஜுக் அலி, கொரோனாவுகுப்பின் பங்குத்தொகையை சரியாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் முதலீடு செய்தவர்கள் பங்குத்தொகை மற்றும் முதலீடு தொகையை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் 2 ஆண்டாக முதலீடு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தினார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை மர்ஜுக் அலியை இதுவரை கைது செய்யவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நேற்று தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்