தஞ்சாவூரிலிருந்து இருந்து ஈரோட்டுக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், ஆக. 28:தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதுதவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள், சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Related posts

வாலாஜாபாத் பகுதிகளில் அதிக ஹாரன் சத்தம் எழுப்பும் குவாரி லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிலம்ப போட்டி வெற்றியை தோல்வியாக அறிவிப்பு; மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்: மேலக்கோட்டையூரில் பரபரப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாளையே துணை முதல்வராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை: பவள விழா ஏற்பாடு பணி ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி