தங்கம் விலை தொடர்ந்து சரிவு ரூ.37 ஆயிரத்துக்குள் சவரன்

சென்னை: தங்கத்திற்கான இறக்குமதி வரியை கடந்த 1ம் தேதி ஒன்றிய அரசு உயர்த்தியது. இறக்குமதி வரி அதிகரிப்பால் தொடர்ந்து ஒரு வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த 14ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,676க்கும், சவரன் ரூ.37,408க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.4,636க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.37,088க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக குறைந்தது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.4627க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.37,016க்கும் விற்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.37 ஆயிரத்துக்குள் வந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை