தங்கம் விலை சவரனுக்கு 328 குறைந்தது

சென்னை தங்கம் விலை கடந்த 2 மாதத்திற்கும் மேலாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 26ம் தேதி ஒரு கிராம் தங்கம் 4,450க்கும், சவரன் 35,600க்கும் விற்கப்பட்டது. 27ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 76 அதிகரித்து ஒரு சவரன் 35,672க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 28ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு 48 அதிகரித்து ஒரு கிராம் 4,507க்கும், சவரனுக்கு 384 அதிகரித்து ஒரு சவரன் 36,056க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 456 அதிகரித்தது.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. இதனால், சனிக்கிழமை விலையிலேயே அன்றைய தினம் தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை சரிவை சந்தித்தது. கிராமுக்கு 41 குறைந்து ஒரு கிராம் 4,466க்கும், சவரனுக்கு 328 குறைந்து ஒரு சவரன் 35,728க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியது….

Related posts

தங்கம் விலை சவரனுக்கு ரூ.55,680ஐ எட்டி புதிய உச்சம்

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!