தங்கம் விலையில் மேலும் ஏற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.184 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.184 அதிகரித்தது. தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் பெயரளவுக்கு குறைவது என்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அப்படியே குறைந்தாலும் மறுநாள் அதே வேகத்தில் உயர்ந்தும் வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ஒரு கிராம் ரூ.4,636க்கும், சவரனுக்கு ரூ.152 குறைந்து ஒரு சவரன் ரூ.37,088க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,659க்கும், சவரனுக்கு ரூ.184 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,272க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்தால் பெயரளவுக்கு குறைவதும், அதிகரித்தால் அதிகப்படியாக உயர்ந்தும் வருவது நகை வாங்குவோரிடையே தொடர்ந்து அதிர்ச்சியையும், ஒரு குழப்பமான சூழ்நிலையையும் ஏற்படுத்தி வருகிறது….

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது

மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி