தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு

சென்னை: 3 நாட்களாக குறைந்து வந்த நிலையில், தங்கம் விலை நேற்று திடீரென சவரனுக்கு ₹160 அதிகரித்தது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர், பங்கு சந்தை வீழ்ச்சி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை கடந்த மாதம் முதல் அதிரடியாக உயர்ந்து வந்தது. ஜெட் வேகத்தில் அதிகரித்தல், அதன் பிறகு குறைவதுமாகவும் இருந்து வருகிறது. கடந்த 14ம் தேதி தங்கம் விலை  கிராமுக்கு ₹25 குறைந்து ஒரு கிராம் ₹4,869க்கும், சவரனுக்கு ₹200 குறைந்து ஒரு சவரன் ₹38,952க்கும் விற்கப்பட்டது. 15ம் தேதி தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ₹38 குறைந்து ஒரு கிராம் ₹4,831க்கும், சவரனுக்கு ₹304 குறைந்து ஒரு சவரன் ₹38,648க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3வது நாளாக நேற்று முன்தினமும் தங்கம் விலை சரிவை சந்தித்தது.நேற்று முன்தினம் கிராமுக்கு ₹44 குறைந்து ஒரு கிராம் ₹4,787க்கும், சவரனுக்கு ₹352 குறைந்து ஒரு சவரன் ₹38,296க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹856 அளவுக்கு தங்கம் விலை குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென அதிகரித்தது. கிராமுக்கு ₹20 அதிகரித்து ஒரு கிராம் ₹4,807க்கும், சவரனுக்கு ₹160 அதிகரித்து ஒரு சவரன் ₹38,456க்கும் விற்கப்பட்டது. திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

Related posts

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை