தக்காளி விலை சரிவு

பாப்பிரெட்டிபட்டி, ஜூலை 7: பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி ஆகிய பகுதிகளில் நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் சேதமடைந்தது. இதனால் தக்காளி வரத்து குறைந்த நிலையில், ஒரு கிலோ தக்காளி ₹100 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், 28 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி அதிகபட்சமாக ₹500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரித்த நிலையில், மேலும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை