தக்காளி பதுக்கலை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை.: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தக்காளியின் விலை உயர்ந்து இருப்பதால் பதுக்கலை தடுக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி, வெங்காயம் உள்பட அத்தியாவசிய பெருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலையை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திரா, வரத்து வரக்கூடிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் விலை உயர்ந்து இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இந்த சூழலை பதுக்கலில் ஈடுபட்டு மேலும் விலை உயர்வைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தவும், ஆய்வுகளை அதிகரிக்கவும் வேளாண்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். உழவர் சந்தை திட்டத்தை மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், சந்தைக்கு அருகே உள்ள பகுதியிலேயே காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தியான காய்கறிகளை சந்தைக்கு கொண்டுவர வாகன ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.  …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்