தகவல் உரிமைச் சட்டம் குறித்து கலந்தாய்வு கூட்டம்

மதுரை, அக்.8: மதுரை பசுமலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் அரசு உத்தரவுப்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 இந்திய நாடாளுமன்றத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.

இதன் நோக்கம் அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டிருப்பதாகும். அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயல்கள் மற்றும் பொறுப்புகள் மேம்படுத்தவும், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயல்கள் குறித்த தகவல்களை பெற விரும்பும் மக்களுக்கு அதை வழங்க வகை செய்தலுமாகும்.

மேலும், ஊழலைக் கட்டுப்படுத்தவும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காப்பதுமாகும். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரை காந்தி மியூசியம் கல்வி அதிகாரி நடராஜன் விழிப்புணர்வு வகுப்பு நடத்தினார். இதில் அரசு போக்குவரத்துக் கழக இணை இயக்குனர் சமுத்திரம், முதுநிலை துணை மேலாளர் ராமன், பொது மேலாளர் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை