‘டேட்டிங்’ தளத்தில் நான் இல்லை: நடிகை லாரா தத்தா விளக்கம்

மும்பை: முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையும், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியின் மனைவியுமான லாரா தத்தா, டேட்டிங் ஆப்ஸ் என்ற சமூக வலைத்தளத்தில் இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நான் எந்த டேட்டிங் ஆப்ஸ் தளத்திலும் இல்லை. நேற்று முன்தினம் முதல் என் போட்டோவுடன் கூடிய டேட்டிங் விளம்பரம் வெளியிடப்பட்டு வருகிறது. இதுபற்றி சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி கேட்கின்றனர். என்னைப் பற்றி தொடர்ந்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். டேட்டிங் ஆப்சில் எனது சுயவிவரம் இருப்பதாக சொல்கின்றனர். அதுபோல் ஒரு சுயவிவரத்தை யாராவது வெளியிட்டு இருந்தால், அது போலியானது. ஒவ்வொருவரிடமும் என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வருகிறேன். நான் டேட்டிங் ஆப்ஸுக்கு எதிரானவள் இல்லை. ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேச இது பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், நான் அந்த ஆப்சில் இல்லை. இதை என் ரசிகர்கள் நம்ப வேண்டும். ரசிகர்கள் வெளியிடும் மீம்ஸ்களைப் பார்த்து மகிழ்கிறேன் என்றாலும், அதில் உண்மை இல்லை….

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு