டெங்கு விழிப்புணர்வு பேரணி

பழநி, ஆக. 8: பழநி அருகே பாலசமுத்திரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் சேகரிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சுப்புரமாமன் துவக்கி வைத்தார். பேரணியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம், பயன் குறித்தும், டெங்கு பரவும் முறை, தவிர்க்கும் முறை, டெங்குவிற்கான அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பேரூராட்சியின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி