டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய ஒன்றிய குழு சென்னை வருகை: அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஒன்றிய அரசின் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குழுவினரான மருத்துவர் ரோஷினி ஆர்த்தர், மருத்துவர் நிர்மல் ஜோ, மருத்துவர் ஜான்சன் அமலா ஜாஸ்மின் ஆகியோர் அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேற்று சந்தித்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல், சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுகள் குறித்து அறிந்து கொள்ளவும், ஆலோசனை வழங்கவும் ஒன்றிய அரசின் சார்பில் 3 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே அவர்களிடம் விளக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை இன்று சென்று பார்க்க உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மற்றும் பல பகுதிகளுக்கு சென்று டெங்குவுக்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு சென்று பார்த்த குழுவினர் பாராட்டினர். சென்னையில் நேற்று டெங்குவினால் 20 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 493 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் 30 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 21 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு மாநில முதல்வர் மாநகராட்சி கட்டிடத்தில் சேவைத்துறைகளுடனான கூட்டம் நடத்தியதும் இதுவே முதல்முறையாகும்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்