காரிமங்கலம், டிச.9: காரிமங்கலம் அருகே சின்னமிட்டஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி மனைவி நாகராணி(45). இவர் உறவினர் கிருஷ்ணன் என்பவருடன், பாலக்கோடு ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பொம்மஅள்ளி கூட்டுரோடு அருகே சென்ற போது, எதிரே வேகமாக வந்த டூவீலர் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே நாகராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் கிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.