டூப்’ போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: 18 ரீல்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.பி.சவுத்ரி தயாரித்துள்ள படம், ‘டிரைவர் ஜமுனா’. இதை ‘வத்திக்குச்சி’ கின்ஸ்லின் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், கவிதாபாரதி, அபிஷேக் குமார், இளையபாண்டி, மணிகண்டன் ராஜேஷ் நடித்துள்ளனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். வரும் 11ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:‘கனா’ படத்தை தொடர்ந்து தியேட்டரில் வெளியாகும் எனது படம், ‘டிரைவர்  ஜமுனா’. கின்ஸ்லின் சொன்ன கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதில் நான் சிறப்பாக நடித்திருக்கிறேன் என்று சொன்னால், அதற்கான பாராட்டு இயக்குனரையே சேரும்.‌ எனது நடிப்பில் உருவான 3 படங்கள், கொரோனா தொற்று காலக்கட்டத்தில் டிஜிட்டல் தளங்களில் வெளியானது. சின்ன பட்ஜெட்  படங்களைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களுடைய ஆதிக்கத்துக்குப் பிறகு பெருமளவில் குறைந்துவிட்டது.  ஆனால், சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமாகவும்,  தரமாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு கண்டிப்பாக கிடைத்தே தீரும். ‘டிரைவர் ஜமுனா’ அந்த வகை படம் என்பதால்  தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. வேகமாக கார் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசுவிடம், எல்லா சண்டைக் காட்சிகளிலும், சாகசக் காட்சி களிலும் ‘டூப்’பே போடாமல் நான் நடிக்கிறேன் என்பதாக வாக்குறுதி அளித்தேன். லாரியுடன் நேருக்கு நேராக மோதும் ஒரு காட்சியில் சிறு பகுதியை தவிர, படம் முழுவதும் சண்டைக் காட்சிகளிலும், சாகசக் காட்சிகளிலும் நானே கார் ஓட்டினேன். பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் மட்டுமே ஷூட்டிங் நடந்தது. இப்படம் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி யுள்ளது. எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத சில படங்களில் ‘டிரைவர் ஜமுனா’வும் ஒன்று….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை