டி20 உலக கோப்பை சாம்பியனுக்கு ரூ.12 கோடி: ஐசிசி அறிவிப்பு

துபாய்: டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்.17ம் தேதி தொடங்கி நவ.14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பரிசுத் தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது. பைனலில் வென்று உலக கோப்பையை முத்தமிடும் அணிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கங்கப்பட உள்ளது.2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6 கோடியும், அரையிறுதியில் தோற்கும் 2 அணிகளுக்கும் தலா ரூ.3 கோடியும் வழங்கப்படும். இது தவிர அரையிறுதி வாய்ப்பை நழுவவிடும் 8 அணிகளுக்கு தலா ரூ.50 லட்சம், முதல் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ.30 லட்சம் கிடைக்கும். சூப்பர் 12 சுற்றில் விளையாட இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்ய தகுதிச் சுற்று நடத்தப்படுகிறது. அதில் இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, ஒமான், பாப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன….

Related posts

சில்லி பாயின்ட்…

சீனா ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் பெகுலா

கிரிக்கெட்டில் இருந்து பிராவோ ஓய்வு