டி.கல்லுப்பட்டி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

பேரையூர், அக். 7: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இளம் வயது திருமணம், வளர் இளம்பருவத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜா, குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப்பணியாளர் அருள்குமார், ஆகியோர் தலைமையில் டி.கல்லுப்பட்டி எஸ்.எஸ்.ஐக்கள் சித்ரா, சூர்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

முகாமினை சமூகநலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள், மருத்துவம், கல்வித் துறை இணைந்து நடத்திது. இதில், இளம் வயது குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் துன்புறுத்தல், வளர் இளம் பருவத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், ஊட்டச்சத்து குறைபாடு, கல்வியின் முக்கியத்துவம், புதுமை பெண் திட்டம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுசம்மந்தமான பாதுகாப்பு மற்றும் தகவல் உதவிகளுக்கு சைல்டுலைன் உதவி எண் 1098, பள்ளிக்கல்வித்துறை எண் 14417, ஒருங்கிணைந்த சேவை மைய எண் 181, ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என விளக்கப்பட்டது. முகாமின் சிறப்பு விருந்தினராக பேரூராட்சி சேர்மன் முத்துக்கணேசன், மகளிர் நல அலுவலர்கள் கருப்பாயி, ராசாத்தி, செவிலியர்கள் கிருஷ்ணவேணி, தேவி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை