டிவிட்டர் டிரெண்டிங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுகவின் தலைவராக 2வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னையில் நேற்று நடந்த திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு திமுகவினுடைய தலைவராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். தற்போது 2வது முறையாக திமுகவின் தலைவராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திமுகவினுடைய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் திமுக தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் ‘தலைவர் எம்.கே.ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து டிவிட்டரில் ‘தலைவர் எம்.கே.ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. அது மட்டுமல்லாமல் கடின உழைப்பு வெற்றியை தரும், சக்தி வாய்ந்தவர்கள் தான் சக்திவாய்ந்த இடங்களுக்கு வருவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்களுடன் ‘தலைவர் எம்.கே.ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்தனர். அதுவும் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை