டிச.1ல் தலைமை ஏற்கிறது இந்தியா தாமரையுடன் ஜி20 சின்னம்: பிரதமர் மோடி அறிமுகம்

புதுடெல்லி: ஜி20 மாநாட்டின் இந்திய சின்னம், இணையதளம், கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, இந்தியா என உலகின் 20 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடம் பெற்றுள்ள கூட்டமைப்பு ஜி20. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 85 சதவீதத்தை ஜி20 நாடுகள் கொண்டுள்ளன. இந்த வலுவான அமைப்பிற்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு உறுப்பு நாடும் தலைமை பொறுப்பை ஏற்கும். அந்த வகையில், வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. முன்னதாக, வரும் 15, 16ம் தேதிகளில் இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.இந்நிலையில், இந்தியா தலைமையேற்று நடத்த உள்ள ஜி20 மாநாட்டுக்கான இந்திய சின்னம், கருப்பொருள், இணையதளத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அமைப்பின் சின்னத்தில், ஜி20 என்பதில் உலக உருண்டையும், 7 இதழ்களை கொண்ட தாமரையும் இடம் பெற்றுள்ளது. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதற்கான ஆன்லைன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் (வாசுதேவ குடும்பம்) என்பதே உலகிற்கு இந்தியா தரும் செய்தி. உலகை ஒன்றிணைப்பதில் இந்தியாவின் நம்பிக்கையையும், பாரம்பரிய கலாசாரத்தையும் தாமரை பிரதிபலிக்கிறது. நாடு 75ம் ஆண்டு சுதந்திர ஆண்டை கொண்டாடும் வேளையில் இந்த மிகப்பெரிய நிகழ்விற்கு இந்தியா தலைமை ஏற்பதற்காக, நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்….

Related posts

கேரள நிதியமைச்சருக்கு முஸ்லிம் மாணவி கை கொடுத்ததால் சர்ச்சை எந்த மத நம்பிக்கையும் அரசியலமைப்பு சட்டத்தை விட உயர்ந்தது அல்ல: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டினை தாதாவின் போதை பார்ட்டிக்கு அழைத்துச் சென்றவர் கைது

கேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்