டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

கோவை, ஜூன் 21: கோவை டாடாபாத் பகுதியில் டாஸ்மாக் மாநில சம்மேளனம் சிஐடியு சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் அன்பு, பாண்டியன், மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, டாஸ்மாக் மாநில சம்மேளனம் துணை பொது செயலாளர் ஜான் அந்தோணிராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை காலம் ஊதியம் வழங்க வேண்டும். பணியின்போது உயிர் இழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்க வேண்டும். கேரளாவை போல் கணினி மயப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்க வேண்டும். உடையும் பாட்டில்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும். காலி பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை மாற்று ஏற்பாடு செய்து அமல்படுத்த வேண்டும். சட்ட சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை