ஜேஇஇ மெயின் தேர்வு முடிவை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

டெல்லி: ஐஐடி, எம்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் சேர்க்கைக்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஐஐடி, எம்ஐடி உள்ளிட்ட பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜேஇஇ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2022-23ம் கல்வியாண்டிற்கான ஜேஇஇ தேர்வு, 2 முறை நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை முன்னதாக அறிவித்தது. அதன்படி ஏப்ரல் மாதத்துக்கான தேர்வு கடந்த மாதம் 23, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய 7 நாட்களில் நாடு முழுவதும் 501 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை jeemain.nte.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனிடையே மே மாதமும் தேர்வு நடைபெற்ற நிலையில், அந்த தேர்வின் முடிவும் வெளியான பின்னர் ஏப்ரல், மே என 2 மாத தேர்வுகளில் மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில், இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.       …

Related posts

ஹத்ராஸில் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி