ஜெயங்கொண்டத்தில் அதிவேக பைக் ரேஸ் 5 பேரிடம் விசாரணை

ஜெயங்கொண்டம், ஏப்.15: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகன ஓட்டிகள் மீது போலீசார் அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாகவே இளைஞர்கள் 8 முதல் 9 மணி வரை இரவு நேரங்களில் அதிகவேக பைக்குகளை வைத்துக்கொண்டு பைக் ரேஸ் செல்வதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருச்சி-சிதம்பரம் பைபாஸ் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே 10 பேர் பைக் ரேசில் ஈடுபட்டதாக பொதுமக்கள் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாஹிராபானுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் சாஹிராபானு மற்றும் ஜெகன்நாத் தலைமையிலான போலீசார் 5 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று பைக்குகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இது சம்பவம் குறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை