ஜூன் 15 முதல் 30 தேதிக்குள் தமிழகத்துக்கு கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்திற்கு வரும் 15 முதல் 30ம் தேதிக்குள் கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பின் 2வது அலை மிகப்பெரிய அச்சத்தை எற்படுத்தியுள்ளது. இதையடுத்து மக்களிடமும் தடுப்பூசி போடும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. ஆனால், தடுப்பூசிக்குதான் தொடர்ந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ‘தற்போது ஜூன் 2ம் தேதி வரை தமிழகத்திற்கு 1 கோடிக்கும் கூடுதலாக கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றில் 93.3 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திடம் இப்போது 7.24 லட்சம் டோஸ்கள் இருப்பு உள்ளது. மேலும், இதே மாதம் 15ம் தேதி வரையில் தமிழகத்துக்கு மொத்தம் 7.48 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசின் மூலம் கிடைக்க உள்ளது. இதைத் தவிர, ஜூன் 15ம் முதல் 30ம் தேதி வரை மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது. அதனால், அங்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது,’ என கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்