ஜிகேஎன்எம் மருத்துவமனையின் 72வது நிறுவனர் தின விழா

 

கோவை, ஜூலை 2: கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை தனது 72வது நிறுவனர் தினத்தை கோவை மணி மேல்நிலை பள்ளியில் உள்ள நானி பல்கிவாலா ஆடிட்டோரியத்தில் நேற்று கொண்டாடியது. இவ்விழாவில் நிறுவனர்கள் மற்றும் அவர்களின் நீடித்த பாரம்பரியத்தை தெரிவித்து கௌரவிக்கும் வகையிலும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் தன்னலம் மற்ற சேவைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையிலும் சிறப்புமிக்க சேவை விருதுகள், செயல்திறன் சிறப்பு விருதுகள் மற்றும் மெரிட்டோரியஸ் சர்வீஸ் விருதுகளை வழங்கப்பட்டது. இதில், இம்மருத்துவமனையின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் ரகுபதி வேலுசாமி, குப்புசாமி நாயுடு அறக்கட்டளை தலைவர் எஸ்.பதி, துணைத்தலைவர் ஆர்.கோபிநாத், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை