ஜல்லிக்கட்டில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

 

சிவகங்கை, ஜன. 13: சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்விற்கு காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் விவரங்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் 2024ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக ஜன.17அன்று சிராவயல் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்வும், ஜன.19அன்று கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நிகழ்வும் நடைபெறவுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்விற்கு காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் விவரங்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்களது விவரங்களை sivaganga.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சிராவயல் நிகழ்விற்கு ஜன.14, ஜன.15ஆகிய தேதிகளிலும், கண்டுப்பட்டி நிகழ்விற்கு ஜன.16மற்றும் ஜன.17ஆகிய தேதிகளிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை