ஜனவரி 6 முதல் சென்னையில் சர்வதேச புத்தகக் காட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னையில் 46-வது சர்வதேச புத்தக காட்சி வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 22-ம் தேதி வரை நடைபெறும் புத்தக திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் இந்தாண்டு நடக்கும் புத்தக காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். இந்தாண்டு திருநங்கைகளுக்கு ஓர் அரங்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாக அமைப்பு குழு தெரிவித்திருக்கிறது.  புத்தக விரும்பிகளின் திருவிழாவாக கருதப்படும் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என அனைத்து தரப்பினரையும் புத்தகக் கண்காட்சிக்கு ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பபாசி நிர்வாகிகள் சென்னை நந்தனம் ஓஎம்சிஏ மைதானத்தில் 45வது புத்தகக் கண்காட்சி 2022ம் ஆண்டு ஜனவரி 6ம் தொடங்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை