ஜனவரி 3 முதல் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைகிளையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் மூடப்பட்டு அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள் தங்கள் வீடுகளிலிருந்து காணொளி வாயிலாக விசாரித்து வந்தனர். பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீதிபதிகள் வீட்டிலிருந்தும் நீதிமன்றத்திற்கு வந்தும் வழக்குகளை விசாரித்தனர். தொடர்ந்து வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி வாதிட விரும்பினால் அதற்கு அனுமதி வழங்கபட்டதோடு காணொளி வாயிலாகவும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைகிளையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழக்குகள் நேரிடையாக மட்டும் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 21 மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் முழுமையாக நேரிடையாக விசாரணை தொடங்கவுள்ளது.      …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்