சோழவந்தான் அருகே பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி முகாம்

சோழவந்தான், ஜன. 22: சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் பரவை ஜிஹெச்சிஎல் பவுண்டேசன் மற்றும் மதுரை பெட்கிராப்ட் டிரஸ்ட் இணைந்து கிராமப்புற பெண்கள் முன்னேற்றத்திற்கான இலவச தொழில் பயிற்சி முகாமினை நடத்தியது. இதற்கு பெட்கிராப்ட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார். ஜிஹெச்சிஎல் அலுவலர் சுஜின் முன்னிலை வகித்தார். பெட்கிராப்ட் தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.

இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர் முத்து முருகன், செயலர் ரேவதி ஆகியோர் குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். இந்த முகாமில், துணிகளில் ஆரி ஒர்க், எம்ப்ராய்டரி, தையல் ஆகியவை குறித்து பெண்களுக்கு பயிற்சியளிப்பதுடன், அதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து பெட்கிராப்ட் நிர்வாகிகள் கூறுகையில் ‘‘இப்பயிற்சி வகுப்புகள் இரண்டு மாதங்கள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் உரிய சான்றிதழ் வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்தவர்களுக்கு சுயதொழில் தொடங்க ஆலோசனைகளுடன், அவர்களின் உற்பத்தி பொருட்களை லாபகரமாக விற்பனை செய்வதற்கும், வங்கி கடன் பெறவும் வழிவகை செய்யப்படும் .இதன் மூலம் இக்கிராம பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும்’’ என்றனர். இதில் பெட்கிராப்ட் அலுவலர்கள் சாரால் ரூபி, அங்குச்சாமி, கதிரவன், பயிற்சியாளர் அகல்யா பாய் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்