சொந்த ஊரில் வாழ விடாமல் துரத்துகிறார்கள்: கன்னியாகுமரியை சேர்ந்த திருநங்கை கண்ணீர்

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே கோவளம் பகுதியை சேர்ந்த பட்டதாரி திருநங்கை ஓவியாமேரி நேற்று மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடம் அளித்த மனுவில், நான் ஒரு அறுவை சிகிச்சை செய்து எனது பாலினத்தை மாற்றி திருநங்கையாக வாழ்ந்து வருகிறேன். என்னை எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் துணையுடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் வரக்கூடாது என்று கூறி மிரட்டுகிறார். என் தாய், தந்தையரை காண வரக்கூடாது என்கிறார்கள். மேலும் என்னை மிரட்டி, துரத்தி அடிக்கிறார்கள். இந்திய குடியுரிமை பெற்ற நான் எனது சொந்த ஊரில் வாழ வழியின்றி தவிக்கிறேன். எனவே சட்ட ரீதியாக எனக்கு உதவிட வேண்டும் என கூறி இருந்தார்.  இந்த மனு தற்போது கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓவியாமேரி கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டில் ஜுலை மாதம் முதல் மின்கட்டணத்தை 4.83% உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் 4.83% மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

பள்ளிக் கல்வித்துறையில் 9 இணை இயக்குநர்கள் அதிரடி மாற்றம்