சைக்கிளில் நிலத்தை உழுத சிறுவனுக்கு புதிய சைக்கிள்: திமுகவினர் வழங்கினர்

திருத்தணி: உழவு இயந்திரம் வாங்க வசதியில்லாததால் தனது சைக்கிள் மூலம் தந்தையுடன் சேர்ந்து நிலத்தை உழுத சிறுவனுக்கு திமுக சார்பில் புதிய சைக்கிள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். விவசாயியான இவர் தனது நிலத்தில் பல வருடங்களாக சம்பங்கி பூ பயிரிட்டு வருகின்றார். ஆரம்பத்தில் நல்ல வருமானம் வந்த நிலையில், சமீபகாலமாக தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் உழவு இயந்திரங்கள் வாங்க முடியாமல் தவித்துள்ளார். வெளியே வாடகைக்கு எடுத்துக்கூட உழவு செய்யமுடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் தனது மகன் தனஞ்செயனின் சைக்கிளை உழவு இயந்திரமாக மாற்றி, அதன்மூலம் மகனுடன் உழவு பணியில் ஈடுபட்டார். இதுபற்றிய செய்தி படத்துடன் வெளியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விவசாயிக்கு உதவவேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர்.தியாகராஜனின் உத்தரவின்படி, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர்  சி.எச்.சேகர், மாவட்ட பொறுப்பாளர் பூபதி, அகூர் மாணிக்கம் உள்பட பலர் நேற்று அகூர் கிராமத்துக்கு சென்றளர். அங்கு சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்ததுடன் குடும்பத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் வழங்கினார்கள். ‘’ முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசி, குடும்பத்துக்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்று திமுகவினர் தெரிவித்தனர்….

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!