சேலையில் ஸ்கேட்டிங் !

கேரளாவைச் சேர்ந்த லாரிசா டிசோசா வெளியில் எங்கு சென்றாலும் ஸ்கேட்டிங்கில் செல்கிறார். கிட்டத்தட்ட நமக்கெல்லாம் எப்படி மொபைலோ அப்படித்தான் லாரிசாவுக்கு அவரின் ஸ்கேட் போர்ட். எங்கே எப்படி ஸ்கேட்டிங் சென்றாலும் அதனை வீடியோவாகப் பதிவிட்டு தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் லாரிசா. இதனால் லாரிசாவுக்கு 6.7 லட்சம் ஃபாளோயர்களும் உள்ளனர்.  சமீபத்தில் அவர் கேரளாவின் பாரம்பரிய ஓணம் சேலை அணிந்து ஸ்கேட்டிங் செய்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாலையின் இருபுறங்களிலும் கேரளாவின் சிறப்புக்குரிய பனைமரங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க, பச்சைப் பசேல் என இருக்கும் இயற்கைப் பின்னணியில், கேரளத்து பாரம்பரிய ஓணம் புடவையில் அவர் அழகாக ஸ்கேட் செய்து போகும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது….

Related posts

நஞ்சே இல்லாத பொருட்களை விற்க வேண்டும் என்பதே ஆசை : தமிழ்ப் பேராசிரியர் சித்தி ஜீனத் நிஷா!!

வெறும் வயிற்றில் வெந்நீர் தரும் நன்மைகள்!

மெடிசேஃப் !