சேலத்தில் நுங்கு விற்பனை சுறுசுறுப்பு

சேலம் : தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பனைமரங்களில் நுங்கு விளைச்சல் அதிகரிக்கும். சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனைமரங்களில் நுங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுங்கு விவசாயிகள் பனைமரங்களில் நுங்கை பறித்து, சாலையோரம் குவித்து விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘மூன்று மாதங்களுக்கு நுங்கு விளைச்சல் இருக்கும். நுங்கில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளதால் உடல் சூட்டை தணிக்கும். 2 நுங்கு ₹10 முதல் ₹12 விற்பனை செய்கிறோம். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்,’ என்றனர்….

Related posts

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு

மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி