சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை, செப். 21: மதுரை, அவனியாபுரத்தில் உள்ள நாடார் மஹாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் ‘தழல் பாதுகாப்பு மன்றம்’ சார்பாக தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி நிர்வாகத்தினர் இந்நிகழ்ச்சி சிறக்க தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மாணவி சந்தியா வரவேற்றார். கல்லூரி முதல்வர் எம்.கவிதா வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் தேன்மொழி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தீயணைப்பு அலுவலர் ஜெ.உதயகுமார் கலந்துகொண்டு மாணவிகளிடையே தீயணைப்பு உபகரணங்களின் பயன்பாடு, எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களைக் கையாளும் விதம் பற்றி விளக்கினார். மேலும், தீயணைப்பான்களை பயன்படுத்தும் விதம், நீர்நிலைகளில் தவறி விழுந்தவர்களைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வகை விபத்துகளுக்கான உடனடி நடவடிக்கைகள் குறித்து, தீயணைப்புத்துறைனர் வாயிலாக மாணவிகளுக்கு நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் மாணவி பாண்டிஸ்வரி நன்றி கூறினார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி