சேர்ந்தமரம் அருகே 20 கிலோ குட்கா பறிமுதல்

 

சுரண்டை, ஜூன் 22: சேர்ந்தமரம் அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த சப்ளையர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். சுரண்டை அருகே சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்குட்பட்ட தன்னூத்து பகுதியில் உள்ள கடை ஒன்றில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக ேபாலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேர்ந்தமரம் எஸ்ஐ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கடையை சோதனை செய்தனர்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் ஜெகதீசன் (74) என்பவரை பேலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு புகையிலைப் பொருட்களை சப்ளை செய்த சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தைச் சேர்ந்த ராஜன் (54) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ராஜனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை