சேரம்பாடி டேன் டீ பகுதியில் காட்டு யானை நடமாட்டத்தால் மக்கள் பீதி

பந்தலூர் :  சேரம்பாடி டேன் டீ பகுதியில் காட்டு யானைகளின் வருகை அதிகரிப்பு மக்கள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளான சேரம்பாடி காப்பாக்காடு, சேரம்பாடி டேன் டீ எலியாஸ் கடை பகுதி, அய்யன்கொல்லி, சாமியார்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சேரம்பாடி அரசு தேயிலைத்தோட்டம் டேன் டீ கார்டன் மருத்துவமனை அருகே உள்ள புல்வெளியில் காட்டு யானைகள் முகாமிட்டதால் தொழிலாளர்கள் மற்றும் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் நெடுஞ்சாலை பகுதிக்கு காட்டு யானைகள் வராமலிருக்க வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி