சேரம்பாடி சந்தனம்மாகுன்னு பகுதியில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கோரிக்கை

 

பந்தலூர், ஜூலை 30: பந்தலூர் அருகே சேரம்பாடி சந்தனம்மாகுன்னு பகுதியில் சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சேரம்பாடி சந்தனம்மாகுன்னு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் மண் சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த பகுதிக்கு சாலை வசதி செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சேரங்கோடு ஊராட்சி சார்பில் கான்கிரிட் சாலை போடப்பட்டது. இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று பெய்த தொடர் மழைக்கு கான்கிரீட் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்