சேரம்பாடி கண்ணம்வயல் பகுதியில் தெருவிளக்குகள் வசதியின்றி பொதுமக்கள் கடும் அவதி

 

பந்தலூர், மார்ச் 15: பந்தலூர் அருகே சேரம்பாடி கண்ணம்வயல் பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி கண்ணம்வயல் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் போதிய தெருவிளக்குகள் வசதி இல்லாததால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்வசதி ஏற்படுத்துவதற்காக சேரங்கோடு ஊராட்சி சார்பில் மின்கம்பம் அமைக்க மின்சார அலுவலகத்திற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. சேரம்பாடி மின்வாரியத்தினர் மக்கள் கூறும் இடத்தில் மின்கம்பத்தை அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்க முன்வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்வரும் 18ம் தேதி சேரம்பாடி மின்வாரிய அலுவலக முன்பு உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி