சேரன்மகாதேவியில் பி.எச்.பாண்டியன் சிலையை முதல்வர் எடப்பாடி திறந்தார்

நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கோவிந்தப்பேரியில் பி.எச்.பாண்டியன் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் மற்றும் திருஉருவ சிலை திறப்புவிழா நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் நேற்று நடந்தது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி. தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் வரவேற்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பி.எச்.பாண்டியன் மணிமண்டபத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பி.எச்.பாண்டியன் திருவுருவ சிலையை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இருந்தாலும், மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு பொருத்தமானவர் பி.எச்.பாண்டியன் ஆவார். கோவிந்தப்பேரியில் தொடங்கி கோட்டை வரை ேகாலோச்சிய பெருமை அவருக்கு உண்டு. எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது அவரோடு இணைந்து பணியாற்றியதோடு, 4 முறை எம்எல்ஏ, 1985ல் சபாநாயகர் பதவியை அலங்கரித்த பெருமை அவருக்கு உண்டு. தேர்தல் ஆணையர் சேஷனுக்கு இணையாக பிஎச் பாண்டியன் சபாநாயகர் பதவிக்கு பேரும், புகழும் ஈட்டித் தந்தார். அவர் சபாநாயகராக ஆன பின்புதான் சட்டமன்றத்திற்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார். …

Related posts

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை :உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உத்தரவு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்