சேரங்கோடு ஊராட்சி அலுவலகம் முன்பு 2 குடும்பத்தினர் உண்ணாவிரதம்

 

பந்தலூர், ஜூலை 24: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி அலுவலகம் முன்பாக இரண்டு குடும்பத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருபவர் சந்திரசேகர். பாட்டாளி மக்கள் கட்சியின் பந்தலூர் ஒன்றிய செயலாளர். இவருக்கும் அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சித்ரா ஆகிய இரு குடும்பத்திற்கும் சேரங்கோடு ஊராட்சியினர் கடந்த 5 நாட்களாக குடிதண்ணீர் திறந்து விடாமல் பாகுபாடு காட்டுவதாகவும்.

அதனால் தண்ணீர் திறந்து விடுபவரை கண்டித்தும் அதற்கு துணை போகும் சேரங்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் ஊழியர்களை கண்டித்தும் சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுடன் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்படது. சம்பவ இடத்திற்கு சேரம்பாடி இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார், வருவாய்துறை ஊழியர்கள், சேரங்கோடு ஊராட்சி மன்றத்தலைவர் லில்லி, துணை தலைவர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை