சேதமான பாதாள சாக்கடை தொட்டியால் விபத்து அபாயம்

ஊட்டி, பிப். 8: ஊட்டி எச்எம்டி செல்லும் சாலையில் சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை தொட்டி மூடியால் விபத்து அபாயம் நீடிக்கிறது. ஊட்டி ஏடிசி பகுதியில் இருந்து பாம்பேகேசில், ரோஜா பூங்கா, ெநடுஞ்சாலைத்துறை அலுவலகங்கள், எல்க்ஹில் முருகன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சாலை உள்ளது. இச்சாலை சற்று மேடான சாலையாகும். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு செல்லாத நிலையில் உள்ளூர் வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையில் எச்எம்டி அருகே சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை தொட்டியின் மூடி சேதமடைந்துள்ளது. இதனை அறியாமல் வரக்கூடிய கார்கள் அதில் சிக்கி கொள்கின்றனர். இதுதவிர இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழ கூடிய சூழலும் நிலவுகிறது. எனவே பழுதடைந்து காட்சியளிக்கும் பாதாள சாக்கடை தொட்டிைய சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை