சேதமான சாலை சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பாபநாசம் : சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபநாசம் அருகே மேல வழுத்தூரில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் பெரியத் தெரு, மேலத் தெரு, கீழத் தெரு, புதுத் தெரு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பல தெருக்களின் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இந்தச் சாலைகளில் நடந்துச் செல்ல முடியாமல் வயதானவர்கள் தடுமாறுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்படுகின்றனர்.மேலும், வாகனங்கள் அடிக்கடி பழுதாகும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முருகேசன் கூறுகையில், வழுத்தூரில் பல சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. சமீபத்தில் போட்ட பள்ளி வாசலுக்கு செல்லும் சாலையும் தரமாகப் போடாததால் பெயரத் தொடங்கி விட்டது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வழுத்தூரிலுள்ள அனைத்து சாலைகளையும் தரமாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை