செல்வவிநாயகர்புரத்தில் கழிவுநீர் கால்வாய் பணிகள்

தூத்துக்குடி, ஜூலை 24: தூத்துக்குடி செல்வவிநாயகர் புரத்தில் நடந்து வரும் கழிவுநீர் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் சாலை, கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 14வது வார்டுக்குட்பட்ட செல்வவிநாயகர் புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிறிய பாலம் அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போதூ மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட செயலாளர் காளிதுரை, வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு