செல்போன் செயலி: ஈரோடு மாநகராட்சி ஆலோசனை

 

ஈரோடு,ஜூலை20: ஈரோடு மாநகராட்சி குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் செல்போன் செயலி அறிமுகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில்,நகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடிப்படையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர, பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், மாநகராட்சி குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் மாநகராட்சியின் சேவைகளை மக்கள் பயன்படுத்தும் வகையில், செல்போன் செயலி அறிமுகப்படுத்துவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ”ஈரோடு மாநகராட்சி குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் சேவைகளை மக்கள் பயன்படுத்தும் வகையில், அடுத்த வாரம் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

அதுகுறித்து, தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதன் மூலமாக மாநகராட்சியின் விவரங்களை தெரிந்து கொள்ளவும், தங்களுக்கான சேவைகளை எளிதாகப் பெறவும் \”ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்\” ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்படும். மாநகராட்சி தொடர்பான குறைகளையும் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்படும்” என்றார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வட மாநில காதல் ஜோடி கடலூரில் திருமணம்

நெல்லிக்குப்பம் அருகே மோதலில் ஈடுபட்ட ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்