செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் 6 இணை இயக்குநர்களுக்கு கூடுதல் பணி: அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களை சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து செயல்பட ஏதுவாக செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இருந்து அயற்பணியில் பணிபுரியும் இணை இயக்குநர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ள அரசு ஆணையிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு அரசாணை: செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களில் அவற்றை சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இருந்து அயற்பணியில் பணிபுரியும் இணை இயக்குநர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ளலாம் என செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் அரசுக்கு கருத்துரு சமர்ப்பித்துள்ளார்.அரசின் கவனமாக பரிசீலனைக்குப் பின்னர், பணிகளை சிறப்பாக மேற்கொள்ள சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்களில் அவற்றை சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து செயல்பட ஏதுவாக செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இருந்து அயற்பணியில் பணிபுரியும் இணை இயக்குநர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி ஆணையிடப்படுகிறது.அதன்படி: சரவணன், இணை இயக்குனர், மக்கள் தொடர்பு அலுவலர் காவல்துறை இயக்குநர் அலுவலகம், சென்னை மண்டலம்.இவர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கூடுதலாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். த.மருதப்பிள்ளை, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், சென்னை. இவர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர், கரூர் மாவட்டங்களையும், டி.எஸ்.சுப்பிரமணியம், சேலம் மாநகராட்சி. இவர், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களையும், கிரிராஜன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம். இவர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,பழனியப்பன், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம். இவர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை. ரா.அண்ணா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், நாகர்கோவில். இவர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கூடுதலாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு