செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறக்க அரசு தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் மகேஷ் பேட்டி

சென்னை: அரசு அறிவித்தபடி செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வுகள் மேற்கொண்டார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசியுள்ளோம்.கடந்த ஆண்டே பள்ளிகள் திறப்பு தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டது. அவற்றில் கூடுதல் அம்சங்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசித்தோம். புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு நாளில் வெளியாகும்.  தமிழகத்தில் பள்ளிகள்  திறப்பது குறித்து முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, செப்டம்பர் 1ம் தேதி திறக்க பள்ளிக் கல்வித்துறை தயார் நிலையில் இருக்கிறது. 11 மாநிலங்களில் பல்வேறுகட்டங்களாக  பள்ளிகள் திறக்கும் நடவடிக்கையை அந்தந்த மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.  முதல்வர் அறிவித்தபடி 50 சதவீத மாணவர்களை கொண்டு சுழற்சி  முறையில் வகுப்புகள் நடத்தப்படும். 40 மாணவர்கள் மட்டுமே இருந்தால், ஒரு நாளில் 20 மாணவர்கள் வரவழைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் என்றார். …

Related posts

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு

வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அரசு ஊழியர் ரூ.10 லட்சம் நூதன மோசடி: போலீசார் வழக்குப்பதிவு