சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் சென்னையை சேர்ந்த ஞானப்பிரகாசம் (52) என்பவர் வந்தார். சோதனைகளை முடித்து, பயணிகள் வருகை பகுதிக்கு எதிரே உள்ள பார்க்கிங் பகுதியில் செல்போனில் பேசியபடி, காருக்காக லக்கேஜுகளுடன் காத்திருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு வாலிபர் ஞானப்பிரகாசத்தின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடினார். அலறியபடி அந்த வாலிபரை விரட்டி பிடிக்க முயன்றார். பொதுமக்களும் விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்து விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் சிதம்பரம் அருகே புவனகிரியை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பதும், வேலை கிடைக்காததால் கூலி வேலைக்கு முயற்சித்து வந்ததும் தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிமுதல் செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்….

Related posts

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிக்கு வாரன்ட்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

யூடியூப்பில் அவதூறு கருத்து கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார்

ஜாமீனில் எடுப்பதற்காக கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு வக்கீலுக்கு கொலை மிரட்டல்: 6 பேர் கைது