சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலையை 15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை 15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஒப்புதலை அடுத்து இந்த மாதம் இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க 90 சதவீத பணிகள் காந்தி சிலை அருகே நடைபெற உள்ளது. மெட்ரோ ரயில் பாதை பணி நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும். சிலை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றப்படும் வரை சிலையை மக்கள் பார்க்கவோ, மாலை அணிவிக்கவோ வாய்ப்பிருக்காது. மெட்ரோவுக்காக ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தும் போது சிலைக்கு சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை