சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஒரே நாளில், ஒரே இடத்தில் 2,000 பேருக்கு கொரோன தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 – 59 வயது வரை இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கில் 20 சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். ஆதார்கார்டு அல்லது அரசு அங்கீகார அடையாள அட்டை ஏதாவது ஒன்றை காண்பித்து இலவசமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் வகையில் இன்று சிறப்பு முகாம் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் இன்று ஒருநாள் மட்டும் ஒரே நேரத்தில் 2,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக முன்கள பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல இணை நோய் இருக்கக்கூடிய 45 வயதிற்கு உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல சென்னையில் பல்வேறு இடஙக்ளில் சிறப்பு முகாம்கள் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்