சென்னை கோயம்பேட்டில் பாஜக- விசிக மோதல்..!!: அம்பேத்கர் சிலை அருகே பாஜக கொடி கட்டியதற்கு எதிர்ப்பு

சென்னை: அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை ஒட்டி கோயம்பேட்டில் அவருடைய சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு இருகட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.  பாஜக மற்றும் விசிகவினர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிராக இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர். அப்பொழுது விசிக தலைவரை வரவேற்பதற்காக அவர்களின் கொடியை சுற்றிலும் நாடு வைத்தனர். அதேபோல, அவ்விடத்திற்கு அரைமணி நேரத்திற்கு பின்பு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். முதலில் விசிக தலைவர் மாலை அணிவித்து சென்ற பின், பாஜகவினரும் மாலை அணிவிக்க சென்ற நிலையில் அவர்களது கொடிகளையும் ஆங்காங்கே நாட்டனர். இதனால் அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நிலவிய நிலையில் மோதலாக மாறியது. இதில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் 4 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி, பின்பு மோதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தனர். இந்த மோதல் நடந்த பின்பே, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். பாஜகவினரின் இந்த செயலுக்கு விசிக-வினர் கடும் கண்டனம் தெரிவித்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இருதரப்பினரிடையே போராட்டமானது தொடர்ந்து அதிகரித்து சென்ற நிலையில், இணை ஆணையர் ராஜேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் விசிக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவ்விடம் விட்டு களைந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும், அங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, அண்ணல் அம்பேத்கர் சிலையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்பு, இருகட்சியின் கொடிகளையும் போலீசார் அகற்றி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அமைதி சூழல் நிலவ காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.                …

Related posts

காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரவுடி தற்கொலை முயற்சி

டாஸ்மாக் கடைகளில் 8 மணிநேர வேலை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு: பணியாளர் சங்க செயற்குழு வலியுறுத்தல்

கோயம்பேடு மார்க்கெட் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்