சென்னை: சென்னையில் பள்ளி மாணவர்கள் செல்வதற்கு வசதியாக கூடுதலாக 20 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. படிக்கட்டு பயணம், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம் நாள் ஒன்றுக்கு 22,000 மாணவர்கள் பயணிக்க முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது….