சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக 2.5 லட்சம் பேருக்கு இலவச கொசுவலை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக 2.5 லட்சம் பேருக்கு இலவசமாக கொசுவலை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தகவல் கூறினார். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு முகாம் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் நடந்து வருகிறது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் கொளத்தூர், வேல்முருகன் நகர், ராஜாஜி நகரைச் சேர்ந்த காமராஜர் தெரு, ஜெய்பீம் நகர் 1வது தெரு, ராஜா தெரு சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் பொது மருத்துவ முகாம்களை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். உடன்,  சென்னை மேயர் பிரியா, மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:திருவிக நகர் சட்டமன்ற தொகுதி மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு 30 கொசு தெளிப்பான் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறுவுறுத்தியபடி 200 இடங்களில் நடந்த மருத்துவ முகாமில் 82,000 பேர் பயன்பெற்றனர். சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 95 சதவீதம் முடிவு பெற்றிருக்கின்றன ஒரு சில இடங்களில் இணைப்பு கால்வாய்களைத் தான் ஏற்படுத்த வேண்டும். வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் கட்டுகின்ற பணிகளை சென்னை மாநகராட்சி துவங்க இருக்கின்றது. வருகின்ற 9ம் தேதி பெருமழை வந்தால் அதை எதிர்கொண்டு, மக்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லாமல் பாதுகாக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே எங்கெல்லாம் மழைநீர் தேங்கி தேங்கிருந்ததோ அங்கே எல்லாம் மின்மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. அவை பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் அகற்றாமல் இருப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக சுமார் 2.5 லட்சம் குடும்பங்களுக்கு இன்று முதல் கொசுவலை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்